000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a உமா சகிதர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a சிவபெருமான் இடதுபுறம் உமையம்மையுடன் நின்றபடி காட்சியளிக்கும் கோலம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவபெருமான் தன் அருகில் நிற்கும் உமையாளை இடையில் அணைத்தபடி, அவள் மார்பைத் தொடுகிறார். இல்லற இணைவின் வாழ்வியல் நிகழ்வுகளில் இதுவும் ஒரு காட்சியாகும். உமா தேவி நாணத்துடன் நிற்கிறாள். உமாசகிதர் நான்கு கரங்கள் பெற்றுள்ளார். முன்னிரு கரங்கள் பெண்மையுடன் ஆனந்தக் கூத்திடுகின்றன. பின்னிரு கரங்களில் இருப்பது மான் மழுவாயிருக்கலாம். ஜடாமகுடராய், நீள் செவிகளில் மகர, பத்ர குண்டலங்கள் அணிந்தவராய், கழுத்து, கை, கால்களில் அணிகலன்கள் பெற்றவராய் விளங்கும் உமாசகிதர் கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை உடுத்தியுள்ளார். தன் தலைவனை அருகில் நெருங்கி இணக்கமுடன் நிற்கும் உமையாள் வலது கரத்தில் மலரினைப் பிடித்துள்ளாள். இடது கை தளிர்க்கரமாக நீண்டு தொங்குகிறது. தேவி சமபாதத்தில் நிற்கிறாள். உமையவளுக்கும் மகுடமும், பிறவணிகளும் அணி செய்கின்றன. இடையில் மேகலையும், நீண்ட ஆடையும் அணிந்துள்ளாள். மானுட வாழ்வில் ஆண் பெண் உறவின் உன்னதத்தை விளக்க கலைப்படைப்புகள் காலத்தின் கட்டாயமாகின்றன. கண்டேன் கண்டறியாதன கண்டேன் என்று அப்பரின் வரிகள் உயிர்க்கூட்டங்களின் இது போன்ற காட்சிகளை திருவையாற்றின் வழிநடையில் கண்டதினால் தான் போலும். முற்றுந்துறந்தவர்க்கே முக்திக்கு முன்னர் இக்காட்சியைக் காட்டி, வாழ்வெதுவென்று விளக்கிய இறைவன் தானே அக்காட்சியுமாய் நிற்கிறார். |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், உமாசகிதர், உமாமகேசுவரர், அணைத்த பிரான், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000537 |
barcode | : | TVA_SCL_000537 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000537_திருவரங்கம்_உமா-சகிதர்-001.jpg | : |
![]() |
Primary File | : |